பட்டாம்பூச்சி விழித்தபோதுதான்
நீயும் எழுந்தாய்
அது சிறகு விரித்தது
நீயும் சோம்பல் முறித்தாய்
இந்த நாள் இனிய நாள்.
(நன்றி ஆ.வி)
••••••••••••••••
நனைதலென்பது
பள்ளிச்செல்லும் சிறுவனை
கூடவே அழைத்துச்செல்கிறாய்
கூடவே வருகிறது மழையும்
தாவணி முனையில்
அவனையும் அணைத்துக்கொள்கிறாய்
நனைகிறேன் நான்.
•
No comments:
Post a Comment