Monday, 16 May 2011

நதி !!!





பால்கேனியில் நின்று
தலை சீவுகிறாய்
கீழே விழுகின்றன மலர்கள்.

•••

சீரகச்செயினை
நீ வாயில் கடிக்கும்
தருணமெல்லாம்
தங்கத்தின் விலை உயருகிறது.

•••

ஓடும் அந்த நதியில் 
ஒவ்வொரு கல்லாய் தூக்கிப்போடுகிறாய்..
காலால் நீரை எத்துகிறாய்...
கைகளால் தள்ளுகிறாய்..
மீன்களைப் பிடிக்க தாவணி ஏந்துகிறாய்...
நீர்சுழிகளைக்காட்டி அழகாய் சிரிக்கிறாய்..


ஒரு மானசரோவர் உருவாகிறது.

••••


2 comments:

மயாதி said...

மானசரோவர்-

appadi enraal enna?

நவநி said...

நன்றி மயாதி

மானசரோவர் ஒரு புனிதமான ஏரி...
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D